Published : 17 Nov 2023 07:49 PM
Last Updated : 17 Nov 2023 07:49 PM
சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி தற்போது இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்திய அணிக்காக கடந்த காலங்களில் உலகக் கோப்பை வென்று கொடுத்த கபில்தேவ் மற்றும் தோனி வரிசையில் சாதனை கேப்டன் பட்டியலில் ரோகித் சர்மா இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் எகிறி உள்ளது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 40 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1983-ல் உலகக் கோப்பை வென்றது. இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இருந்தது இந்தியா. தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011-ல் சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கையை இறுதியில் வீழ்த்தி இருந்தது. சச்சின், சேவாக், கம்பீர், ஜாஹிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன், கோலி, அஸ்வின் ஆகியோர் இந்த அணியில் விளையாடி இருந்தனர். இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற இந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் கேப்டன்களின் பங்கு முக்கியமானது. 1983 இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை களத்தில் அபாரமாக செயல்பட்டு பிடித்திருப்பார் கபில்தேவ். அதேபோல 2011 இறுதி ஆட்டத்தில் தோனி, 79 பந்துகளில் 91 ரன்கள் விளாசி இருப்பார். அதுவும் இந்திய அணியின் வெற்றிக்கான ரன்களை சிக்ஸர் அடித்து ஃபினிஷ் செய்திருப்பார் தோனி. இந்த இரண்டு தருணமும் ஒவ்வொரு இந்திய மற்றும் கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத நினைவுகள்.
அதுபோல தற்போதைய கேப்டன் ரோகித்தும் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உலகின் தலைசிறந்த பவுலர்கள் வீசும் பந்துகளை நேர்த்தியாக பவுண்டறியாகவும், சிக்ஸர்களாகவும் விளாசுகிறார். அவரது இந்த அதிரடி தொடக்கம் பேட்டிங் ஆர்டரில் அடுத்து வந்து ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிதும் உதவுகிறது. அவரது அந்த பாணி ஆட்டம் ஆஸி.க்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் தொடர்ந்தால் இந்திய கிரிக்கெட்டில் சாதனை கேப்டன்கள் பட்டியலில் ரோகித்தும் இணைந்து சரித்திரம் படைப்பார். பத்துக்கு பத்து என இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.
Kapil Dev in 1983.
MS Dhoni in 2011.
It's time for Rohit Sharma to join the elite list and walk towards the glory. pic.twitter.com/Wg7nLTk5QV— Johns. (@CricCrazyJohns) November 17, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT