Published : 14 Nov 2023 03:40 PM
Last Updated : 14 Nov 2023 03:40 PM
கராச்சி: பாகிஸ்தானின் உலகக் கோப்பை தோல்வி குறித்து கூறும்போது, ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்குக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது. உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாபர் அஸமின் கேப்டன்ஷிப், சுழல்பந்து வீச்சாளர்களின் மோசமான ஆட்டம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்ச்சை என அனைத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "தற்போது இருக்கும் ஃபார்மை கொண்டு உலகில் முன்னேறிய அணிகளை பாகிஸ்தான் வீழ்த்திவிட என்று நினைத்தால் அது நடக்காது. பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. ஏனென்றால் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய ஷாஹீன் அப்ரிடி மற்றும் பாபர் அஸம் ஆகியோர் மிகவும் இளமையாக உள்ளதால், இந்த அணியே அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடும்" என்று பேசினார்.
இதே நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன் யூனிஸ் கானின் எண்ணங்கள் குறித்து பேசும்போது, "அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது. நான் பேசுவது உங்களின் எண்ணத்தை பற்றி" என்று அப்துல் ரசாக் பேசினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் அப்துல் ரசாக் பேசியதை சிரித்து கைதட்டினர்.
எனினும், தவறான நோக்கத்தில் சொல்லப்பட்ட இந்தக் கருத்தை அடுத்து அப்துல் ரசாக்கை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். "இது மோசமான முன்னுதாரணம்" என்பது போன்று ரசிகர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
Shameful example given by Abdul Razzaq. #AbdulRazzaq #CWC23 pic.twitter.com/AOboOVHoQU
— Shaharyar Ejaz (@SharyOfficial) November 13, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT