Published : 10 Nov 2023 12:24 AM
Last Updated : 10 Nov 2023 12:24 AM

“இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது சவால்” - நியூஸி. கேப்டன் வில்லியம்சன்

கோப்புப்படம்

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது போட்டியில் இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து. இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.

“சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினோம். முதல் சுற்றை சில அணிகள் ஒரே புள்ளிகளில் முடிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை. அனைத்தும் எங்களுக்கு சாதாகமாக அமைந்தால் அரை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவோம். இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என வில்லியம்சன் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கான ரேஸில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறினால் இந்தியாவுடன் விளையாட வேண்டும்.

கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதியில் விளையாடி இருந்தன. இதில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டி தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x