Published : 06 Nov 2023 12:17 AM
Last Updated : 06 Nov 2023 12:17 AM
ராஞ்சி: நடப்பு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா. இது இந்திய மகளிர் ஹாக்கி அணி வெல்லும் 2-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டமாகும்.
கடந்த மாதம் 27-ம் தேதி இந்த தொடர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. இதில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன. மொத்தம் 18 போட்டிகள். கடந்த 2021-ல் நடைபெற்ற 6-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றிருந்தது ஜப்பான்.
முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தென் கோரியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது இந்தியா.
இறுதிப் போட்டியில் தொடக்க முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. சங்கீதா 17-வது நிமிடத்திலும், நேஹா 46-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 57-வது நிமிடத்திலும், வந்தனா 60-நிமிடத்திலும் கோல் பதிவு செய்தனர். முதல் கால்பகுதி (First Quarter) ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. 2-வது கால்பகுதி ஆட்டத்தில் சங்கீதா கோல் பதிவு செய்தார். 3-வது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. 4-வது கால் பகுதியில் மூன்று கோல்களை பதிவு செய்தது இந்தியா.
#WATCH | Ranchi: On winning Jharkhand Women's Asian Champions Trophy 2023, Captain of Indian women's hockey team Savita Punia says, "We are feeling very good right now. When we came here we were a bit nervous as Japan is a very good team. Japan played very well too... We played… pic.twitter.com/DagXZP5Oej
— ANI (@ANI) November 5, 2023
#WATCH | Jharkhand: Crackers burst in Ranchi to celebrate the victory of Team India against Japan.
Jharkhand Women's Asian Champions Trophy Ranchi 2023 | India wins the title, beats defending champion Japan by 4-0. pic.twitter.com/oSy4YUWL7N— ANI (@ANI) November 5, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT