Published : 29 Oct 2023 04:46 AM
Last Updated : 29 Oct 2023 04:46 AM
சென்னை: தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சாா்பில் கிளப்புகள், அகாடமி, தனிநபா்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடர் சென்னை செயின்ட் தாமஸ்மவுண்ட் மாண்ட்ஃபோா்ட் விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. வார இறுதி நாளில் மட்டும் போட்டி நடத்த திட்டமிப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.6 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
எலைட், ஓபன், சப்-ஜூனியர், வணிக நிறுவனங்கள், சோசியல் கிளப்கள் என 5 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் எலைட் பிரிவில் அதிகபட்சமாக 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணியில் மொத்தம் 5 பேர் இடம் பெறுவார்கள். இவர்களில் ஆடவர், மகளிர், யு-19 வீரர், யு-19 வீராங்கனை, யு-15 சிறுவர் அல்லது சிறுமி ஆகியோர் அணியில் இருக்க வேண்டும். ஒரு மோதலில் 5 ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள், 2 இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் இடம் பெறும். இந்த தொடரில் மொத்தம் 70 அணிகளைச் சேர்ந்த 400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இத்தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளா் ஏவி.வித்யாசாகா் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT