Published : 22 Oct 2023 10:19 PM
Last Updated : 22 Oct 2023 10:19 PM

ODI WC 2023 | கோலியின் மீண்டுமொரு அபார இன்னிங்ஸ் - நியூஸி.யை தோற்கடித்து இந்தியா 5வது வெற்றி

தர்மசாலா: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 21வது போட்டியில் நியூஸிலாந்து அணியை விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே பெறாத நியூஸிலாந்து அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

275 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் மற்றும் கில் கூட்டணி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இக்கூட்டணியில் கில் பொறுமை ரோகித் வழக்கம் போல் அதிரடியை கடைபிடித்தார். அணியின் ஸ்கோர் 71 ரன்கள் இருக்கும் பெர்குசன் ஓவரில் ரோகித் அவுட்டானார். ரோகித் 46 ரன்கள் எடுத்தார். அடுத்த ஐந்து ரன்கள் எடுப்பதற்குள் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 26 ரன்களில் பெர்குசன் ஓவரில் கேட்ச் ஆனார் கில்.

ஸ்ரேயாஷ் அய்யர் வந்த வேகத்தில் 6 பவுண்டரிகளை விளாசியவர், 33 ரன்களில் ட்ரென்ட் போல்ட் ஓவரில் கேட்ச் ஆகி நடையைக்கட்டினார். இதன்பின் விராட் கோலி - கேஎல் ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயற்சித்தனர். அதன்படி, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் இருவரும் எடுத்திருந்தனர். அப்போது சான்டனர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகினார் கேஎல் ராகுல். 27 ரன்களில் ராகுல் வெளியேறிய பின் வந்த சூர்யகுமார் யாதவ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அவர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கான போராடினார். அவருக்கு ஜடேஜா பக்கபலமாக இருந்தார். இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 95 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின் ஜடேஜா பவுண்டரி அடிக்க, இறுதியில் 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. நடப்பு தொடரில் இந்தியா பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும். அதேநேரம் நியூஸிலாந்து பெறும் முதல் தோல்வி இதுவாகும்.

நியூஸிலாந்து தரப்பில் இந்தப் போட்டியில் பெர்குசன் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x