Published : 15 Oct 2023 09:34 PM
Last Updated : 15 Oct 2023 09:34 PM
புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கன் பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இது. கடந்த 2015-ல் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். ஆப்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து 114 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்தார். இப்ராஹிம் ஸத்ரான் 28 ரன்கள், ரஷித் கான் 23 ரன்கள், முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்கள் எடுத்திருந்தார்.
285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 66 ரன்கள் எடுத்திருந்தார். ஓவர்களுக்கு ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
முஜீப் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். மொஹம்மது நபி 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நவீன் மற்றும் ஃபஸல்ஹக் ஃபரூக்கி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT