Published : 14 Oct 2023 02:05 PM
Last Updated : 14 Oct 2023 02:05 PM
அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த இந்திய வீரர் சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக கோப்பை தொடர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாட உள்ளது. இதனால், இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ப்ளேயில் லெவன்: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தான் ப்ளேயிங் லெவன்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
7 வருடங்களுக்குப் பிறகு.. பாகிஸ்தான் அணி கடைசியாக இந்திய மண்ணில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போதுதான் விளையாடி வருகிறது. 7 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணியானது இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த ஆட்டம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் டாப் 4-ல் மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி அபாரமாக செயல்பட்டு வெற்றி தேடிக்கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் அழுத்தம் மிகுந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின்டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் சவால் அளிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...