Published : 14 Oct 2023 12:57 AM
Last Updated : 14 Oct 2023 12:57 AM
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டி சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியை காண வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வங்கதேசம் தோல்வியை தழுவியது. இதுவரை நடப்பு உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது வங்கதேசம். இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளது. அடுத்ததாக இந்தியாவுடன் வரும் 19-ம் தேதி வங்கதேசம் விளையாட உள்ளது.
“வங்கதேசம் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்த்தேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதனால் எனக்கு ஏமாற்றம் ஏதுமில்லை. தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி” என வங்கதேச ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: New Zealand defeated Bangladesh by eight wickets in the ICC World Cup match
"I'm not disappointed. We were expecting Bangladesh to win but it's okay. Losing is part of the game..." says a fan pic.twitter.com/YjCRiifkPE— ANI (@ANI) October 13, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment