Published : 11 Oct 2023 01:15 AM
Last Updated : 11 Oct 2023 01:15 AM
ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணியாகவும் இப்போது பாகிஸ்தான் திகழ்கிறது. இலங்கை அணி நிர்ணயித்த 345 ரன்களை அந்த அணி சேஸ் செய்தது. இந்நிலையில், மைதான பராமரிப்பு ஊழியர்களுடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த மைதானத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து, நியூஸிலாந்து - நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் - இலங்கை என மொத்தம் 3 போட்டிகள் மட்டுமே நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் - இலங்கை போட்டி முடிந்ததும், மைதான பராமரிப்பு ஊழியர்களுடன் உற்சாக போஸ் எடுத்துக் கொண்டனர் பாகிஸ்தான் அணி வீரர்கள். அந்தப் படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. கேப்டன் பாபர் அஸமும் தனியாக மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு போட்டோ எடுத்துக் கொண்டார். திட்டமிட்டபடி போட்டி நடைபெற உதவிய மைதான பராமரிப்பு ஊழியர்களை பாராட்டும் வகையில் இது அமைந்துள்ளது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத் நகரில் வரும் சனிக்கிழமை விளையாட உள்ளது.
உலகக் கோப்பையில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணிகள்
A note of appreciation to the Hyderabad ground staff #CWC23 | #PAKvSL pic.twitter.com/XAfWzlrxaI
— Pakistan Cricket (@TheRealPCB) October 10, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment