Published : 08 Oct 2023 02:03 PM
Last Updated : 08 Oct 2023 02:03 PM
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்தப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக 2 மணி அளவில் தொடங்குகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வெற்றியை எதிர்நோக்கியுள்ளனர். இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துவதால் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
1983 மற்றும் 2011-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அதேவேளையில் ஹாட்ரிக் உட்பட 5 முறை பட்டம் வென்று குவித்துள்ள ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைமையில் களம் காண்கிறது. இந்திய அணியானது ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற நிலையில் உலகக் கோப்பையில் களமிறங்குவது கவனிக்கத்தக்கது.
இந்திய அணியின் ப்ளேயில் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். ஷுப்மன் கில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர், களமிறங்குவது சந்தேகம் தான். சூர்யகுமார் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT