Published : 29 Jul 2014 10:00 AM
Last Updated : 29 Jul 2014 10:00 AM

காமன்வெல்த்: வெள்ளி வென்றார் ககன் நரங்

காமன்வெல்த் ஆடவர் 50 மீ. ரைபிள் புரோன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றார். திங்கள்கிழமை போட்டியில் துப்பாக்கி சுடுதல் மூலம் கிடைத்த 3-வது பதக்கம் இது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி வரை ககன் நரங் போராடினாலும், அவரால் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இறுதியில் 203.6 புள்ளிகளுடன் வெள்ளியைக் கைப்பற்றினார் நரங். 52 வயதான ஆஸ்திரேலியாவின் வாரன் போடென்ட் 204.3 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் கெனீத் பார் 182 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

காமன்வெல்த் போட்டியில் ககன் நரங் வென்ற 9-வது பதக்கம் இது. முன்னதாக 2006 காமன்வெல்த் போட்டியில் 4 தங்கமும், 2010 காமன்வெல்த் போட்டியில் 4 தங்கமும் வென்றுள்ளார் நரங். ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 12-வது பதக்கம் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x