Published : 06 Sep 2023 02:46 PM
Last Updated : 06 Sep 2023 02:46 PM

“இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களுக்கு என்னால் அமைதி காக்க முடியாது” - கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர் | கோப்புப்படம்

இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினால், தன்னால் அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இவர் பாஜகவின் கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

“கிரிக்கெட் மற்றும் வர்ணனைகளில் ஈடுபடுவதை நான் விரும்புகிறேன். வசதியாக இருக்கும் போதெல்லாம் ஒரு பகுதி நேர எம்.பி.யாக இருப்பதற்கு நான் எப்போதும் ஆசைப்படுவதில்லை. போட்டியை பார்க்க செல்லும்போது இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களையும், காஷ்மீர் கோஷங்களையும் எழுப்பினால் நான் அமைதியாக இருப்பேன் என்று எதிர்பார்க்க முடியாது” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியை பார்க்க கம்பீர் சென்றிருந்தபோது, அவரை நோக்கி மைதானத்தில் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் சிலர் கோஷம் எழுப்பினர். அதற்கு மோசமான சைகையை கம்பீர் செய்தது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. 'கோலி, கோலி' என ரசிகர்கள் முழக்கம் எழுப்பியதற்கு கம்பீர் இப்படி செய்தார் என கடந்த ஐபிஎல் சீசனில் கம்பீர் மற்றும் கோலி இடையிலான மோதலை மையப்படுத்தி சமூக வலைதளத்தில் கருத்துகள் உலா வந்தன. இந்நிலையில், அதற்கு கம்பீர் விளக்கம் கொடுத்தார்.

அதில் தன்னை நோக்கி பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் இந்திய தேசத்துக்கு எதிராகவும், காஷ்மீர் குறித்து கோஷங்களை எழுப்பியதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார். அதுபோன்ற சூழலில் எந்தவொரு இந்தியரும் அதைதான் செய்திருப்பார் எனவும், இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய நாட்டை தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பகுதி நேர எம்.பியாக தன்னால் இயங்க முடியாது என சேவாக் கருத்து தெரிவித்திருந்தார். அது கம்பீரை மனதில் வைத்து சேவாக் சொன்ன கருத்து என நெட்டிசன்கள் சொல்லியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x