Published : 01 Sep 2023 11:23 AM
Last Updated : 01 Sep 2023 11:23 AM

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேற்றம்!

குகேஷ் | கோப்புப்படம்

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார்.

செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வயது நபர் என குகேஷ் அறியப்படுகிறார். கடந்த 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். இந்நிலையில், இந்திய செஸ் வீரர்களில் முதலிடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். தனது ஆஸ்தான வழிகாட்டி விஸ்வநாதன் ஆனந்தை இதன் மூலம் அவர் முந்தியுள்ளார்.

செப்டம்பர் மாதத்துக்கான உலக தரவரிசையில் 2,758 ரேட்டிங் உடன் எட்டாம் இடத்தில் உள்ளார். அண்மையில் முடிந்த செஸ் உலகக் கோப்பை தொடரில் காலிறுதி போட்டி வரை அவர் முன்னேறி இருந்தார். தற்போது உலா தரவரிசையில் டாப் 10-ல் இடம் பிடித்துள்ள அவர், கரோனா தொற்றின் போது செஸ் விளையாட்டு சார்ந்த முக்கிய அம்சங்களில் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவுடன் கவனம் செலுத்தினார். அதன் பலனாக உலக தரவரிசையில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டார். டாப் 25, டாப் 10 இடங்கள் என தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார்.

உலக தரவரிசையில் டாப் 25-ல் இடம் பிடித்துள்ள இந்தியர்கள்

  • குகேஷ் (8-ம் இடம்)
  • விஸ்வநாதன் ஆனந்த் (9-ம் இடம்)
  • பிரக்ஞானந்தா (19-ம் இடம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x