Published : 29 Dec 2017 10:31 AM
Last Updated : 29 Dec 2017 10:31 AM
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹைதராபாத்தைச் சேர்ந்த மிதாலி ராஜூக்கு தெலங்கானா அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. நூலிழையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணியினர் தவறவிட்டிருந்தனர். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் மிதாலி ராஜூக்கு தெலங்கானா அரசு ரூ. 1 கோடி பரிசு, ஹைதராபாத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதாக அறிவித்தது.
இதில் ரூ. 1 கோடிக்கான காசோலை ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிதாலி ராஜூக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை அமைச்சர் பத்மாராவ் வழங்கினார்.
இந்த வீட்டுமனை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் மிதாலி ராஜின் பயிற்சியாளர் மூர்த்திக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT