Published : 23 Dec 2017 10:32 AM
Last Updated : 23 Dec 2017 10:32 AM
ஒருநாள் தொடரில் 3-வது இரட்டைச் சதம் கண்டு அசத்திய ரோஹித் சர்மா, நேற்று இந்தூர் டி20யில் 35 பந்துகளில் சதம் கண்டார். 12 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என்று ஒளிவெள்ளத்தை மறைக்கும் சிக்சர் தீபங்களை ஏற்றினார்.
இந்நிலையில் ரோ‘ஹிட்’ மேன் என்று செல்லப்பெயர் வைக்கப்பட்ட ரோஹித் சர்மாவுக்கு ட்விட்டரில் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
அஸ்வின்: முதல் டி20 இரட்டைச் சதம், அணியின் அதிக பட்ச ரன்கள் ஆகிய சாதனைகள் உடைபடும் அச்சுறுத்தல்! பெரிய ஷாட்களை ஓவியம் போல் வரைந்த கலைஞன் ரோஹித்.
ரெய்னா: ஹிட் மனிதன் மீண்டும். துல்லியமான, சக்தி வாய்ந்த ஷாட்கள் அதன் சிறப்பான வெளிப்பாட்டைக் கண்டது. வணங்குகிறேன் சகோதரா. இரட்டையாக்கு!
ரசல் ஆர்னால்ட்: இது கிறிஸ்துமஸ் நேரம், ரசிகர்கள் கூட்டத்தில் விளக்குகள், ரோஹித், ராகுலிடமிருந்து சரவெடி. இலங்கையும் திருப்பி அளிக்கும் உணர்வுடன் ஆடியது.
மிட்செல் மெக்லினாகன்: ‘வாவ் மீண்டுமா?’
சஞ்சய் மஞ்சுரேக்கர்: உலகில் சிலர் இருக்கலாம்...ரோஹித் சர்மா இந்த மூடில் ஆடும்போது ஒப்பிட்டுப் பேச இந்திய அணியில ஒருவரும் இல்லை.
லஷ்மண்: என்ன ஒரு ஸ்டன்னிங் செஞ்சுரி!
ஆகாஷ் சோப்ரா: ரோஹிலீஷியஸ்! டி20-யில் முதல் இரட்டைச் சதம் உண்மையில் சாத்தியமே.
ஹர்ஷா போக்ளே: ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் என்று நாம் நினைக்கும் போது வேறு ஒன்று தனித்துவத்துடன் எழுகிறது. ரோஹித் சர்மா இதனைக் காட்டி விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT