Published : 24 Aug 2023 07:31 AM
Last Updated : 24 Aug 2023 07:31 AM
துபாய்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியானது நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடனும், நெதர்லாந்துடனும் மோதுகிறது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி செப்டம்பர் 30-ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் குவாஹாட்டியிலும், அக்டோபர் 3-ம் தேதி நெதர்லாந்துடன் திருவனந்தபுரத்திலும் மோதும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்த 2 ஆட்டங்களும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகின்றன.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...