Published : 23 Aug 2023 09:19 AM
Last Updated : 23 Aug 2023 09:19 AM
கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லக்ஷயா சென் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்ஷயா சென், தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜினை எதிர்த்து விளையாடினார். 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-11, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT