Published : 22 Aug 2023 09:17 AM
Last Updated : 22 Aug 2023 09:17 AM

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: பிரனோய், லக்‌ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரனோய், லக்‌ஷயா சென் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 5-7ம் நிலை வீரரான பின்லாந்தின் கல்லே கோல்ஜோனெனுடன் மோதினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், 111-ம் நிலை வீரரான மொரிஷியஸின் ஜார்ஜஸ் ஜூலியன் பாலை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 25 நிமிடங்களில் முடிவடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x