Published : 18 Aug 2023 11:48 AM
Last Updated : 18 Aug 2023 11:48 AM
சென்னை: அஜர்பைஜானின் பாகு நகரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார்.
கால் இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா மோதினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அரையிறுதியில் அமெரிக்காவின் ஃபேபியானோவுடன் விளையாட உள்ளார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“உலகக் கோப்பை செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு அரையிறுதியில் விளையாடியுள்ள 2-வது இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இந்திய நாட்டின் செஸ் திறனை இந்தப் போட்டி வெளிக்காட்டியது. சிறப்பாக விளையாடிய அர்ஜுன் எரிகைசிக்கு எனது வாழ்த்துகள்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Congratulations @rpragchess for your historic achievement, only the second Indian after @vishy64theking to be in the semifinal of #FIDEWorldCup and one step away from qualifying for the #Candidates. The match showcased Indian chess at its best. Well played @ArjunErigaisi. https://t.co/NTv3PsCU6z
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT