Published : 17 Aug 2023 07:40 AM
Last Updated : 17 Aug 2023 07:40 AM

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து | இறுதிச் சுற்றில் இங்கிலாந்து

கோப்புப்படம்

சிட்னி: உலகக் கோப்பை மகளிர் கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சிட்னியில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டியை காண மைதானத்தில் 75 ஆயிரம் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

இதில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் எல்லா டூன் (36-வது நிமிடம்), லாரன் ஹெம்ப் (71-வது நிமிடம்), அலெஸ்ஸியா ருஸ்ஸோ (86-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் சாம் கேர் (63-வது நிமிடம்) கோல் அடித்தார்.

இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்பெயினுடன் வரும் 20-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. ஸ்பெயின் அரை இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியிருந்தது. 19-ம் தேதி நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தொடரை நடத்தி வரும் ஆஸ்திரேலியா, ஸ்விடனுடன் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x