Published : 15 Aug 2023 06:57 AM
Last Updated : 15 Aug 2023 06:57 AM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த வாள்வீச்சு அணியினர் 17 பேர், வரவிருக்கும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெறும் வகையில் சென்னை வந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வருகை தந்த 10 வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர் என 17 பேருக்கும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால், அம்மாநில விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற சாதகமற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர்கள் தமிழ்நாடு வர விருப்பம் தெரிவித்தனர்.
இதன் பேரில் மணிப்பூர் வாள் வீச்சு வீரர், வீராங்கனைகளை விமானத்தில் சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. சென்னை வருகை தந்துள்ள மணிப்பூர் வாள்வீச்சு அணியினருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்ளவுள்ள மணிப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

#Manipur-ல் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால், அம்மாநில விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற சாதகமற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்ட நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்கள்.… pic.twitter.com/FMy7wSi9VF
— Udhay (@Udhaystalin) August 14, 2023

Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT