Published : 14 Aug 2023 09:09 AM
Last Updated : 14 Aug 2023 09:09 AM

ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

புதுடெல்லி: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி 4-வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தத் தொடரில் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து ஆடவர் அணி முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் 2917.87 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து நான்காவது இடத்திலும், ஜெர்மனி அணி 5-வது இடத்திலும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x