Published : 10 Aug 2023 08:31 AM
Last Updated : 10 Aug 2023 08:31 AM
வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 8 முதல் 15 வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட் ஒரு வருடத்துக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். போல்ட், கடந்த ஆண்டு பிக்பாஷ் டி 20 தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணியின் சம்பள ஒப்பந்தத்தை ஏற்க மறுத்திருந்தார்.
தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரெண்ட் போல்ட், நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் சாதாரண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் அடிப்படையில் தற்போது அணிக்கு தேர்வாகி உள்ளார். இதன் மூலம் அவர் வரும், அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரெண்ட் போல்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர், 99 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். முதுகுவலி காயத்துக்காக சிகிச்சை பெற்று வந்த கைல் ஜேமிசனும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஜேமிசன் கடைசியாக 2022ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி இருந்தார்.
நியூஸிலாந்து அணி விவரம்: டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம்மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி, வில் யங்.- ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT