Published : 07 Aug 2023 10:24 AM
Last Updated : 07 Aug 2023 10:24 AM

ODI WC 2023 | கம்மின்ஸ் தலைமையில் 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்த ஆஸி.

ஆஸி. வீரர்கள் | படம்: ஐசிசி

சிட்னி: எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. உலகக் கோப்பை தொடரில் ஆஸி. அணியை வழிநடத்துகிறார் கம்மின்ஸ்.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில் 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை ஆஸி. அறிவித்துள்ளது. ஐசிசி உத்தரவின் படி செப்டம்பர் 28-ம் தேதிக்கு முன்னதாக இந்த அணி 15 வீரர்கள் என்ற அளவில் குறைக்கப்படும். ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் விளையாட உள்ளது.

ஆஸ்திரேலிய அணி: கம்மின்ஸ் (கேப்டன்), அபாட், ஆஷ்டன் ஏகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் சிட்டோனிஸ் , டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x