Published : 16 Nov 2017 10:18 AM
Last Updated : 16 Nov 2017 10:18 AM
சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவில் புஸ்ஹாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், 12-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் விவென் ஜாங்குடன் மோதினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-12, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். சாய்னா 2-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 57-ம் நிலை வீரரான இந்தியாவின் சவுரப் வர்மா 14-21, 21-15, 11-21 என்ற செட் கணக்கில் 55 நிமிடங்கள் போராடி 30-ம் நிலை வீரரான பிரான்சின் பிரைஸ் லெவெர்டெஸிடம் தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT