Published : 30 Nov 2017 09:24 PM
Last Updated : 30 Nov 2017 09:24 PM
முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிவேகமான 300 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
24 வயதான மார்கோ மரைஸ் 191 பந்துகளில் 300 ரன்கள் விளாசி இந்தச் சாதனையைச் செய்துள்ளார், முன்னதாக சார்லி மெக்கார்ட்னி என்ற ஆஸ்திரேலிய வீரர் 221 பந்துகளில் அடித்த முச்சதமே சாதனையாக இருந்தது. இவர் நாட்டிங்கம் அணிக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 96 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை முறியடித்தார் காட்டடி மார்கோ மரைஸ்.
ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் பார்டர் அணிக்கு ஆடிய மார்கோ மரைஸ், கிழக்கு மாகாண அனிக்கு எதிராக இந்த அதிவேக முச்சதம் சாதித்தார்.
இதுவரை கேள்விப்படாத மார்கோ மரைஸ் தனது முச்சதத்தில் 35 பவுண்டரிகள் 13 சிக்சர்களை விளாசினார். தன் அணி 82/4 என்று திணறிய போது இவர் களமிறங்கினார்.
இவரும் பிராட்லி வில்லியம்ஸ் (113 நாட் அவுட்) சேர்ந்து 428 ரன்களைச் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT