Last Updated : 22 Nov, 2017 04:33 PM

 

Published : 22 Nov 2017 04:33 PM
Last Updated : 22 Nov 2017 04:33 PM

மிட்செல் ஜான்சனை விட பயங்கரமாக வீசுகின்றனர் இப்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள்: ஸ்டீவ் ஸ்மித் உற்சாகம்

இப்போதைய ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஜான்சனை விடவும் பயங்கரமாக வீசுகின்றனர் என்று நாளை (23-11-17, வியாழன்) பிரிஸ்பனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதையடுத்து ஆஸி.கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

2013-14 தொடரில் மிட்செல் ஜான்சன் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் இங்கிலாந்து 0-5 ஒயிட்வாஷ் ஆனதோடு பல வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர், பீட்டர்சன் உட்பட முக்கிய வீரர்கள் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்படவோ, இல்லை அவர்களாகவோ விலக நேரிட்டது.

“வலையில் பாட் கமின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் வீசுவதைப் பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. மிட்செல் ஜான்சன் வீசியதை விடவும் பயங்கரமாக வீசுகின்றனர்.

நான் இரண்டு செஷன்கள் கமின்ஸ், ஸ்டார்க்கை வலையில் ஆடினேன் உண்மையில் பயமாகவே இருந்தது. எனவே இது எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.

நேதன் லயன் முன்னதாக கூறும்போது, இங்கிலாந்து வீரர்கள் பலரின் கிரிக்கெட் வாழ்வு இந்த ஆஷசுடன் முடிவுக்கு வரும் என்று கூறி புயலைக் கிளப்பியிருந்தார்.

நேதன் லயன் முக்கியத்துவம் குறித்து ஸ்மித் கூறும்போது, “இங்கிலாந்து அணியில் இடது கை வீரர்கள் இருப்பதால் நேதன் லயன் நிச்சயம் உதவியாக இருப்பார். லயனும் அற்புதமாக வீசி வருகிறார்.

நானும் லெக் ஸ்பின் வீசலாம் என்று முடிவெடுத்துள்ளேன், ஆனால் நான் வீச வேண்டிய நிலை ஏற்படாது என்றே நம்புகிறேன்.

வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக கணிசமான ஓவர்களை வீசுவதில் வசதியாகவே உணர்கின்றனர்.

வார்னர் கடந்த 24 மணி நேரத்தில் உடல் நிலை தேறி வருகிறார். ஆட்ட தருணத்தில் 100% உடற்தகுதி பெறுவார் என்று கருதுகிறேன். அவர் ஆட முடியாவிட்டால் ஷான் மார்ஷ், பேங்க்ராபிட் தொடக்கத்தில் இறங்க வாய்ப்புண்டு. ஆனால் வார்னர் நிச்சயம் ஆடுவார்” என்றார் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x