Published : 03 Aug 2023 11:06 PM
Last Updated : 03 Aug 2023 11:06 PM
சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இன்று சென்னையில் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் சீனா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்தப் போட்டியில் 7-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (3-ம் தேதி) தொடங்கியது. நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ளன.
கொரியா - ஜப்பான், மலேசியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை அடுத்து இந்தியா மற்றும் சீனா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் கோல் பதிவு செய்து அசத்தினர்.
போட்டி தொடங்கிய முதல் 16 நிமிடங்களில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. 18-வது நிமிடத்தில் தான் சீனா முதல் கோலை பதிவு செய்தது. அடுத்த ஒரு நிமிடத்தில் மேலும் ஒரு கோலை இந்தியா பதிவு செய்தது.
25-வது நிமிடத்தில் சீனா மேலும் ஒரு கோலை பதிவு செய்தது. ஆட்டத்தின் 30 மற்றும் 41-வது நிமிடத்தில் மேலும் இரண்டு கோல்களை இந்தியா பதிவு செய்து 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.
இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் மற்றும் வருண் குமார் தலா 2 கோல்கள் பதிவு செய்தனர். சுக்ஜீத், மன்தீப் மற்றும் ஆகாஷ்தீப் தலா ஒரு கோல் பதிவு செய்தனர்.
Seeing Team India playing Asian Champions Trophy today,I am remembering my journey before 16 years, when i was playing at the same venue before this lovely crowd.#AsianChampionsTrophy2023 #IndiaKaGame pic.twitter.com/VJm7IDyrx3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT