Published : 17 Jul 2014 10:00 AM
Last Updated : 17 Jul 2014 10:00 AM

பிரிட்டன் வாழ் இந்தியர்களை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்குள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்தனர். லண்டனில் உள்ள இந்திய தூதர் ரஞ்சன் மத்தாய் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கேப்டன் தோனி அணி வீரர்களை இந்திய சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தி பேசினார்.

‘ஒவ்வொரு நாட்டுக்கு செல்லும் போது அங்குள்ள இந்திய சமூகத்தினரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும்போது அது இந்தியனாக இருப்பதில் கூடுதல் பெருமையை அளிக்கிறது.’ என்று தோனி கூறினார்.

ரஞ்சன் மத்தாய் வீட்டில் உள்ள பூங்காவில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. இதில் பிரிட்டன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பரூக் இன்ஜினீயர், திலிப் வெங்சர்க்கார், திலிப் டோஸி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டன் தொழில்துறை அமைச்சர் மேத்யூ ஹேன்கோக், இந்தியா – இங்கிலாந்து இடையே உள்ள நல்லுறவு தொடர்ந்து மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இரு நாட்டிலுமே கிரிக்கெட்டுக்கு ஏராளமான ரசிக்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது நட்புறவை மேம்படுத்தும் நடவடிக்கையில் முக்கிய அம்சம்தான் என்று தெரிவித்தார். 1959-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்தியா முதல்முறையாக இங்கிலாந்தில் 5 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x