Published : 08 Nov 2017 04:26 PM
Last Updated : 08 Nov 2017 04:26 PM
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அனி ரன்னராக முடிவடைந்தது, இதனையடுத்து அந்தத் தொடருக்கான பரிசுத்தொகையாக தலா ரூ.38.67 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ இதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. பயிற்சியாளர்கள் முதல் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு அளித்த தொகையின் விவரங்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 18 முதல் ஜனவரி 17-ம் தேதி வரையிலான 3 மாதக் காலக்கட்டத்துக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு ரூ.2.02 கோடி வழங்கப்பட்டுள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணுக்கு ரூ.26.99 லட்சமும், லஷ்மிபதி பாலாஜிக்கு ரூ.50 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு அளித்த தொகையினையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணிக்கு இந்த ஐபிஎல் சீசனின் வருவாய் பகிர்மானமாக ரூ.19.44 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பலரது எதிர்பார்ப்பையும் மீறி பாகிஸ்தான் அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT