Published : 02 Aug 2023 01:14 AM
Last Updated : 02 Aug 2023 01:14 AM
சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்கும் வகையில் பாகிஸ்தான் ஹாக்கி அணி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்துள்ளது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நாளை (3-ம் தேதி) முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் பாகிஸ்தான் ஆடவர் ஹாக்கி அணி இந்தியா வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் மற்றும் நாதஸ்வரம் முழங்க கரகாட்டம், மயிலாட்ட கலைஞர்கள் ஆட்டம் ஆடி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வீரர்கள் விமான நிலையத்தில் குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
#WATCH | Tamil Nadu: Pakistan Men's Hockey team arrived in Chennai to participate in the Asian Men's Hockey Champions Trophy 2023 which will begin on Thursday, August 3 pic.twitter.com/zKkbIZcxrO
— ANI (@ANI) August 1, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT