Published : 03 Nov 2017 09:54 AM
Last Updated : 03 Nov 2017 09:54 AM
ஆண்டின் இறுதியில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்துள்ளார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் தனது 2-வது சுற்றில் தென் கொரியாவின் ஹையோன் சுங்கை 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இதன் மூலம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வதை நடால் உறுதி செய்துள்ளார்.
16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 31 வயதான நடாலுக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் அவர் பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனில் மகுடம் சூடியிருந்தார். இந்த சீசனின் தொடக்கத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த அவர் ஆண்டில் இறுதியை நம்பர் ஒன் இடத்துடன் நிறைவு செய்ய உள்ளார். கடந்த 2008, 2010, 2013-ம் ஆண்டுகளிலும் ரபேல் நடால் சீசனை நம்பர் ஒன் இடத்துடன் நிறைவு செய்துள்ளார்.
நடால் கூறும்போது, “இந்த சீசனை தொடங்கும்போது முதலிடத்தை பிடிப்பது எனது நோக்கமாக அமையவில்லை. இரு ஆண்டுகளாக பல்வேறு காயங்களால் போட்டிகளில் விளையாடமல் இருந்து விட்டு திரும்பி வந்து விளையாடும் போது தரவரிசை பற்றி சிந்திக்க முடியாது. ஆனால் தற்போது அது நிகழ்ந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நம்பர் ஒன் வீரராக சீசனை நிறைவு செய்ய உள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT