Published : 14 Nov 2017 09:01 PM
Last Updated : 14 Nov 2017 09:01 PM
வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கவிருப்பதையடுத்து அங்கு தங்கள் அணிக்கு களத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பதை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கணித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணி எதிரணியினரின் கேப்டன்களைக் குறிவைத்து கேலி, கிண்டல் செய்வது வழக்கம், இம்முறை ஜோ ரூட் இதற்கு இலக்காகவுள்ளார், இதற்கான முன்னறிகுறிகளை ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கெனவே தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் ஜோ ரூட் கூறியதாவது:
“எங்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரையும் குறி வைப்போம். கொண்டு வாருங்கள், எங்களிடம் உங்களால் முடிந்ததைக் கொண்டு வாருங்கள், போட்டிமனப்பான்மை வேண்டுமெனால் சிறிது பகைமையும் தேவைப்படுகிறது.
இது ஒரு மகா தொடர், அவர்களிடம் சில பெரிய வீரர்கள் உள்ளனர், சிலபல குணச்சித்திரங்களையும் அந்த அணி கொண்டுள்ளது. அவர்கள் பந்து வீச்சில் தரம் உயர்ந்தது, எங்களிடமும் சரிசமமான பவுலிங் உள்ளன.
பிரிஸ்பன் மைதானத்தில் ஆடும் போது பகைமையான, உரத்த, ஒருமாதிரியான ரவுடி சூழலை எதிர்பார்க்கிறோம், ஆனால் எதற்கும் தயாராக இருக்கிறோம்.
அலிஸ்டர் குக் உட்பட பெரிய சதங்களை எடுக்கத் தொடங்கி விட்டால், அது 5 டெஸ்ட் போட்டிகளுக்குமான உயிரோட்டமுள்ள மனநிலையை அளிக்கும்.
சிலர் கூறுகின்றனர், மிகவும் விரைவிலேயே உச்சத்தைத் தொட்டுவிட வேண்டாம் என்று கருதுகின்றனர், அதனால் பயிற்சி ஆட்டங்களிலேயே பெரிய சதங்கள் தேவையில்லை என்று நினைக்கின்றனர், ஆனால் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது எப்போதும் நல்லது.
இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT