Published : 22 Nov 2017 05:10 PM
Last Updated : 22 Nov 2017 05:10 PM
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியர்கள் வாய் அதிகம் பேசுகின்றனர், இது அவர்களுக்கு எதிராகவே செல்லும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எச்சரித்துள்ளார்.
நேதன் லயன் இங்கிலாந்து வீரர்கள் பலரது கிரிக்கெட் வாழ்வு இந்தத் தொடருடன் முடியப்போகிறது என்று புயலைக் கிளப்ப அதற்கு பதிலடியாகவும், மேத்யூ ஹெய்டனின் மோசமான கேலிக்கு எதிராகவும் ஜோ ரூட் இவ்வாறு கூறியுள்ளார்.
“எங்கள் வீரர்கள் இப்படிப் பேசுவதை நாங்கள் விரும்புவதில்லை. இது நல்மதிப்புக்கு எதிரானது. இவ்வாறு பேசுவது அவரது இயல்பா, அல்லது அணியின் உத்தியா என்பது யாருக்குத் தெரியும். அதிகம் வாய்பேசினால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே நெருக்கடி கொடுத்துக் கொள்கின்றனர், இது அவர்களுக்கு எதிராகவே செல்லும்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவில் முதல் ஆஷஸ் தொடரில் ஆடுகின்றனர், எனவே அவர்கள் எங்கள் உக்கிரத்தை உணர்வார்கள்.
ஏகப்பட்ட சப்தங்கள், சூளுரைகள், கருத்துக்கள் ஆனால் அவர்கள் களத்தில் நிரூபிக்க வேண்டுமே.
பிரிஸ்பனில் ஆஸ்திரேலியா அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது, அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியை எப்போதும் இங்கு வைக்கின்றனர். எனவே பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். இது மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும்.
சூழ்நிலைகளை விரைவில் கணித்து பிட்சிற்கு ஏற்ப ஆடி, உணர்வுகளைக் கட்டுப்படுத்தினால் நிச்சயம் எங்களுக்கு வாய்ப்புள்ளது” என்றார் ஜோ ரூட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT