Published : 27 Jul 2023 01:52 PM
Last Updated : 27 Jul 2023 01:52 PM

ஹிஜாபை துறந்த ஈரானிய செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் நாட்டு குடியுரிமை

சாரா கதீம்

மாட்ரிட்: கடந்த ஜனவரி மாதம் ஸ்பெயின் நாட்டில் குடியேறினார், ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் நாட்டு வீராங்கனையான சாரா கதீம் (Sara Khadem). தற்போது அவர் ஸ்பெயின் நாட்டு குடியுரிமையை பெற்றுள்ளார்.

ஈரானைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனையான சாரா கதீம், ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்து கொண்டார். ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாய விதி. அந்த நிலையில், அந்நாட்டில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது.

அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கஜகஸ்தானில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் சாரா ஹிஜாபை துறந்தார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதன் காரணமாக அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது ஈரான் அரசு.

அதன்பின், உறவினர்களின் ஆலோசனையின்படி அவர் ஸ்பெயின் நாட்டில் குடியேறினார். அவரது சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு பிரிவின் கீழ் தற்போது அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது ஸ்பெயின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x