Published : 25 Jul 2023 11:06 AM
Last Updated : 25 Jul 2023 11:06 AM

MLC | பிளே-ஆஃப் சுற்றுக்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தகுதி!

டெக்சாஸ் அணி வீரர்கள்

மோரிஸ்வில்லே: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) எனும் ஃப்ரான்சைஸ் லீக் டி20 கிரிக்கெட்டின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் , எம்ஐ நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிக்கார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம், சியாட்டில் ஓர்காஸ் என ஆறு அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐபிஎல் போல அமெரிக்க நாட்டில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த சூழலில் நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்கு டூப்ளசி தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. 5 லீக் போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகள் பெற்றுள்ளது அந்த அணி. சான் பிரான்சிஸ்கோ யூனிக்கார்ன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 171 ரன்களை வெற்றிகரமாக விரட்டி பிளே-ஆஃப் சுற்றுக்கு சூப்பர் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது. அந்த அணிக்காக மிலிந்த் குமார் 42 பந்துகளில் 52 ரன்கள் மற்றும் டேனியல் சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் அணி 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது மிலிந்த் மற்றும் சாம்ஸ் இணைந்து அணியை மீட்டனர். அதன் மூலம் அந்த அணி வெற்றி பெற்றது.

ஃப்ரான்சைஸ் லீக் டி20 கிரிக்கெட்டில் சூப்பர் கிங்ஸ் குடும்பம் அசத்தலான ஆட்டத்தை நடப்பு ஆண்டில் விளையாடி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. தென்னாப்பிரிக்க டி20 கிரிக்கெட்டில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் அரையிறுதியில் விளையாடி இருந்தது. தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x