Last Updated : 29 Nov, 2017 05:15 PM

 

Published : 29 Nov 2017 05:15 PM
Last Updated : 29 Nov 2017 05:15 PM

முடிந்தால் என் பந்து வீச்சை அடித்து ஆடிப்பாருங்கள்: இங்கிலாந்துக்கு நேதன் லயன் சவால்

 பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் பிட்சின் போக்குக்கு எதிராக அருமையாக வீசிய நேதன் லயன் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தன் பந்து வீச்சை முடிந்தால் இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடிப்பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் சில வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை இந்தத் தொடருடன் முடிந்து விடும் என்று ஆஷஸ் தொடருக்கு முன்பு கூறி வெறுப்பேற்றிய நேதன் லயன் தற்போது, ‘முடிந்தால் அடியுங்கள்’ என்று சவால் விடுத்துள்ளார்.

“இங்கிலாந்து அணியினர் என்னை அடித்து ஆடினால் நிச்சயம் என் வலையில் விழுவர். என் பந்து வீச்சை அடித்துத் துவைத்து என்னை பந்துவீச்சிலிருந்தே தூக்குமாறு செய்தால் எனக்கு அது பிடிக்கவே செய்யும்.

நிச்சயம் கடந்த டெஸ்ட் போட்டியை விட வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியினர் எனக்கு எதிராக சிறந்த உத்தியுடன் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட சவால்கள்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் வேடிக்கையே.

வலது கை, இடது கை வீரர்களுக்கும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களுக்கும் வீசும் சவால்கலை நான் எப்பவும் விரும்பியே இருக்கிறேன். வீரர்கள் அடித்து ஆடும்போதுதான் எனக்கும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது, சவாலை எதிர்நோக்குகிறேன்.

ஜோஷ் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் ஸ்பின் பவுலிங் பற்றி பேசும்போது அது ஏதோ மிகவும் எளிதானது என்று பேசுவர், கொஞ்சம் தூரம் வந்து விரல்களில் பந்தை பிடித்து கையைச் சுற்றுவது என்பார்கள். ஆனால் ஆஸ்திரேலிய பவுலிங் யூனிட்டைப் பொறுத்தவரை ஒருவரையொருவர் நன்றாக மதிக்கப்பழகியவர்கள்” என்றார் நேதன் லயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x