Published : 19 Jul 2023 09:52 PM
Last Updated : 19 Jul 2023 09:52 PM
இலங்கை: எம்ரஜிங் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான் A அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா A அணி வீழ்த்தியது.
இந்தியா A மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கிடையிலான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் போட்டி இலங்கையின் கோலம்போவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காத நிலையில், சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் காசிம் அக்ரம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை சேர்த்தது.
இந்தியா A அணி தரப்பில் ஆர்எஸ்ஹங்கர்கேகர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மானவ் சுதர் 3 விக்கெட்டுகளையும், ரியான் ப்ராக், நிஷாந்த் சிந்து ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மிரட்டலான தொடகத்தை கொடுத்தார் தமிழ்நாடு வீரர் சாய்சுதர்சன். 110 பந்துகளில் 104 ரன்களை குவித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் அவுட்டானார். நிகின் ஜோஸ் 53 ரன்களில் கிளம்பினார். யஷ் துல் 21 ரன்களிலும், சாய் சுதர்சன் 104 ரன்களில் அவுட்டாகமால் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்தியா A அணி பாகிஸ்தான் A அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT