Published : 19 Jul 2023 08:33 AM
Last Updated : 19 Jul 2023 08:33 AM

இந்திய மகளிர் ஹாக்கி அணி மீண்டும் தோல்வி

கோப்புப்படம்

வைஸ்பேடன்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சீனாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது.

இந்நிலையில், நேற்று ஜெர்மனிக்கு எதிராக இந்திய அணி மோதியது. இதில் 1-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் 29-வது நிமிடத்தில் வைஷ்ணவி கோல் அடித்தார். ஜெர்மனி அணி சார்பில் ளநக லாரன்ஸ், ஜெட் ஃப்ளெஸ்கட்ஸ் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x