Published : 17 Jul 2023 09:49 AM
Last Updated : 17 Jul 2023 09:49 AM

இன்டர் மியாமி கால்பந்து அணியில் இணைந்தார் மெஸ்ஸி

மெஸ்ஸி

அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி அமெரிக்க இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனான லயோனல் மெஸ்ஸி, 2022-ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

ஏற்கெனவே கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள மெஸ்ஸிக்கு, இந்த வெற்றியின் மூலம் மேலும் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அர்ஜென்டினா மட்டுமல்லாமல், பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடி வந்தார் மெஸ்ஸி. அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அவர் எந்த கால்பந்து கிளப் அணியில் இணைவார் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அதே நேரம் அவர் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனிடையே மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணியும், சவுதி அரேபியா அல் ஹிலால் அணியும் முயற்சி செய்து வந்தன. இந்நிலையில் அமெரிக்க இன்டர் மியாமி அணியை லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்து கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி தங்கள்அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x