Published : 15 Jul 2023 04:24 PM
Last Updated : 15 Jul 2023 04:24 PM
ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2022-ல் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்த லக்னோ அணிக்கு ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான ஆண்டி பிளவர் இதுநாள் வரை தலைமைப் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்டி பிளவரின் பயிற்சிக்காலம் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னால் தொடக்க வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பிளவரின் 2 ஆண்டுகால பயிற்சிப் பணி முடிந்த நிலையில் லக்னோ பிரான்ச்சைஸ் அவரது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை. இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் லக்னோ டாப் 4 அணிகளுள் ஒன்றாக முடிந்தது.
லாங்கர் ஐபிஎல் அணிக்கு இதுவரை பயிற்சி செய்ததில்லை, ஆனால் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பாக அவர் பிக்பாஷ் லீகில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து மூன்று முறை அந்த அணி டைட்டில் வென்றது. யுஏஇயில் ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற போதும் ஜஸ்டின் லாங்கர்தான் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இயக்குநர் கவுதம் கம்பீருடன், கம்பீர் ஆடிக்கொண்டிருந்த போது இணைந்து லாங்கர் பணியாற்றியிருக்கிறார். தனது சர்வதேச கிரிக்கெட் கரியரை மீட்டெடுக்க கவுதம் கம்பீர்,, ஜஸ்டின் லாங்கரின் உதவியையே நாடினார். லாங்கரின் பேட்டிங்கைப் பார்த்து தன் பேட்டிங்கை வடிவமைத்துக் கொள்ள முயற்சித்தவர் கம்பீர்.
கம்பீரின் தீராத கிரிக்கெட் ஆர்வத்தை லாங்கர் மெச்சினார். கம்பீர் கேப்டன்சியில் கொல்கத்தாவை இருமுறை கோப்பையை வெல்ல வைத்துள்ளார். இந்திய அணிக்காக ஆடிய போது 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தவர் கம்பீர், இந்த கம்பீரின் வெற்றிகளில் லாங்கரின் அபரிமிதமான பங்கு உண்டு.
இந்நிலையில் இருவரும் இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஒன்று சேர்ந்திருப்பது அடுத்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் வண்ணத்தையே மாற்றிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
Dear Andy,
Today it's farewell, but it'll never be goodbye because you'll always be one of our own. Thank you for everything! pic.twitter.com/EGtaRvYiHj
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT