Published : 11 Jul 2023 09:22 AM
Last Updated : 11 Jul 2023 09:22 AM
லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் புகழ்மிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 102-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா அன்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 3-6,7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மிர்ரா அன்ட்ரீவா போதிய அனுபவம் இல்லாததால் இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார். முதல் செட்டை கைப்பற்றிய அவர், 2-வது செட்டையும் கைப்பற்ற நெருங்கினார். ஆனால் தனது அனுபவத்தை பயன்படுத்தி மேடிசன் கீஸ் 2-வது செட்டை டை பிரேக்கருக்கு எடுத்துச் சென்று தன்வசப்படுத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் மிர்ரா அன்ட்ரீவாவை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெற்றியை பறித்தார் மேடிசன் கீஸ்.
மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 13-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இதில் ரைபகினா முதல் செட்டில் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக பீட்ரிஸ் ஹடாத் மியா விலகினார். இதனால் எலெனா ரைபகினா கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT