Published : 10 Jul 2023 09:14 AM
Last Updated : 10 Jul 2023 09:14 AM

மகளிர் டி20 கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டி

மிர்பூர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷோர்னா அக்தர் 28,சோபனா மோஸ்தரி 23, ஷாதி ராணி 22, ஷமிமா சுல்தானா 17 ரன்கள் சேர்த்தனர்.

115 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணியானது 16.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், யாஷ்டிகா பாட்டியா 9 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஷபாலி வர்மா 0, ஸ்மிருதி மந்தனா 38, ஜெமிமா ரோட்ரிக் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x