Published : 09 Jul 2023 06:41 AM
Last Updated : 09 Jul 2023 06:41 AM
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட், சிஎஸ்கே அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு அமெரிக்காவில் நடைபெற்ற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஐபிஎல் பாணியில் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடர் நடைபெற உள்ளது. டி 20 கிரிக்கெட் வடிவிலான இந்தத் தொடர் வரும் 13ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கி உள்ளது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக அம்பதி ராயுடு முதல் சீசனில் இருந்து விலகி உள்ளதாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதி வழங்குவது இல்லை. அதேவேளையில் அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டால் வெளிநாட்டு தொடர்களில் கலந்துகொள்வதில் வீரர்களுக்கு சிக்கல் ஏதும் இல்லை.
இதை கருத்தில் கொண்டு வீரர்கள் திட்டமிட்டு ஓய்வு முடிவை அறிவித்தால் அதற்கான விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பிசிசிஐ தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் அம்பதி ராயுடு எம்எல்சி தொடரின் தொடக்க சீசனில் இருந்து விலகி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT