Published : 09 Jul 2023 06:49 AM
Last Updated : 09 Jul 2023 06:49 AM
பெங்களூரு: இந்தியாவின் முன்னணி அகர்பத்தி தயாரிப்பாளரும், சர்வதேச கிரிக்கெட் சமூகத்தின் முக்கிய உறுப்பினருமான சைக்கிள் பியூர் அகர்பத்தி, கரீபியனில் நடைபெற உள்ள இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடருக்கான டைட்டில் ஸ்பான்ஸராக செயல்பட உள்ளது.
பாரம்பரியமாக இரு நாடுகளும் போட்டியிடும் டெஸ்ட் தொடருக்கு ஃபிராங்க் வொரல் கோப்பை என பெயரிடப்படும். ஆனால் இம்முறை நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர், ‘சைக்கிள் பியூர் அகர்பத்தி டெஸ்ட் தொடர்’ என்று அழைக்கப்படும்.
2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம்வரும் 12-ம் தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. இந்த தொடரின் 2-வது ஆட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான 100-வது போட்டியாகும். இதனால் இந்தத் தொடர் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 1948-ல் டெல்லியில் மோதின. இரு அணிகளும் மோத உள்ள மைல்கல் போட்டியான 100-வது டெஸ்ட் டிரினிடாட்டில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூலை 20-ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை நடைபெறுகிறது.
சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ஜூன் ரங்கா கூறும்போது, “எங்களின் முதன்மை நோக்கங்களில் ஒன்று, இளம் திறமைகளை வளர்ப்பதும், மேம்படுத்துவதும் ஆகும். போட்டியின் போது கூட பிரார்த்தனை செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கிரிக்கெட் எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக செயல்படுகிறது. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் நாங்கள் டைட்டில் ஸ்பான்ஸராக செயல்பட உள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சர்வதேச அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஒற்றுமை, பிரார்த்தனை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மதிப்புகளை பிரச்சாரம் செய்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்த ஸ்பான்ஸர்ஷிப் வழங்குகிறது. இந்த முக்கியமான சுற்றுப்பயணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணிக்குஎங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இரு அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிகுந்த 100-வது போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT