Published : 29 Jun 2023 07:29 AM
Last Updated : 29 Jun 2023 07:29 AM
சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது.
இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதின.இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
50-வது நிமிடத்தில் தமிழ்நாடு வீராங்கனை துர்கா ‘சுய கோல்’ அடித்தார். இதனால் ஹரியாணா 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த 7-வது நிமிடத்தில் பிரியதர்ஷினி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. தொடர்ந்து 83-வது நிமிடத்தில் இந்துமதி கார்த்தீசன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தமிழ்நாடு அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
கடைசியாக 2017-18-ம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி பட்டம் வென்று அசத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT