Published : 19 Jun 2023 08:48 PM
Last Updated : 19 Jun 2023 08:48 PM
ஹராரே: ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சதம் பதிவு செய்து அசத்தினார் அமெரிக்க அணி வீரர் கஜானந்த் சிங். 109 பந்துகளில் 101 ரன்களை அவர் குவித்திருந்தார்.
ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அமெரிக்கா விரட்டியது. இருந்தும் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது அமெரிக்கா. இருந்தாலும் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது கஜானந்த் சிங்கின் சதம். அவர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. கடைசி ஓவரில் இந்த சதத்தை அவர் எட்டியிருந்தார்.
இது சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் ஒருநாள் கிரிக்கெட் சதம் ஆகும். “இதை நான் எனது தந்தைக்காக செய்தேன். இது மிகவும் உணர்ச்சி மிகு தருணம். ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் அறிமுகமானேன். இது எனக்கு பெரிய விஷயம்” என கஜானந்த் சிங் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT