Published : 18 Jun 2023 06:21 AM
Last Updated : 18 Jun 2023 06:21 AM
சென்னை: சென்னையில் நடைபெற்றுவரும் 9-வது மாநில அளவிலான குறுந்தூர நீச்சல் போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணியைச் சேர்ந்த கிரிஷிகேசவ், மதுஸ்ரீ ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கம் வென்றனர்.
சென்னை முகப்பேரில் உள்ள எஸ்டிஏடி டால்பின் நீச்சல் அகாடமி சார்பில் 9-வது மாநில அளவிலான குறுந்தூர நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இதன் முதல் நாள் போட்டியில் கிரிஷிகேசவ், மதுஸ்ரீ ஆகிய இருவரும் தலா 2 தங்கபதக்கம் வென்றனர்.
கிரிஷிகேசவ் 100மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (1:04.00), 200மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (2:22.00) பிரிவிலும், மதுஸ்ரீ 100மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (1:16.21), 400மீட்டர் ப்ரீஸ்டைல் (5:20.13) ஆகிய பிரிவிலும் தங்கம் வென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT