Published : 15 Jun 2023 12:44 PM
Last Updated : 15 Jun 2023 12:44 PM

மறக்குமா நெஞ்சம் | 2017-ல் இதே நாளில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் சதம் கண்ட ரோகித்!

ரோகித் சர்மா | படம்: ட்விட்டர்

பர்மிங்கம்: கடந்த 2017-ல் இதே நாளில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் சதம் விளாசி இருந்தார் இந்திய வீரர் ரோகித் சர்மா. அவரது அபார ஆட்டம் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற செய்திருந்தது.

இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது.

முதல் விக்கெட்டிற்கு தவான் மற்றும் ரோகித், 87 ரன்கள் சேர்த்தனர். தவான், 46 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கோலி உடன் 178 ரன்களுக்கு அபார கூட்டணி அமைத்தார் ரோகித். கோலி, 78 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். ரோகித், 129 பந்துகளை எதிர்கொண்டு 123 ரன்கள் சேர்த்தார். 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அவரது ஆட்டத்தில் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடி, தொடரில் இரண்டாம் இடம் பிடித்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய ரோகித், 304 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் மூலம் அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தை தவான் பிடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x